சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மின்சார ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Siva
திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:00 IST)
சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி மின்சார ரயில், மே 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது.

சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. அதேபோல் திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், காலை 9.50க்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து கிளம்பி வேலூர் கண்டோன்மெண்ட் , ஆரணி ரோடு, பெண்ணாத்தூர், கன்னமங்கலம், ஒன்னுபுரம்,சேடராம் பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம்,  போளூர் ஆகிய நகரங்கள் வழியாக திருவண்ணாமலை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

நீண்ட நாட்களாக சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும் ரயிலை திருவண்ணாமலை வரை நீடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் உள்பட அனைவரும் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்