மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி.. வேலூர் தொகுதி என்ன ஆகும்?

Mahendran

புதன், 17 ஏப்ரல் 2024 (15:17 IST)
நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்த நிலையில் சில நாட்களிலேயே அவர் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடும் நிலையில் கடந்த சில நாட்களாக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள நிலையில் வித்தியாசமாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து குடியாத்தம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அவருக்கு நெஞ்சுவலி என்ற தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவரது உடல்நிலை குறித்த எந்தவித தகவலும் இன்னும் மருத்துவமனை தெரிவிக்கவில்லை. இதனால் வேலூர் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்