நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் விரைவில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என மதிய இணைய அமைச்சர் எல் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்காக 6080 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாகவும் சர்வதேச தரத்திற்கு 73 ரயில் நிலையங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
மேலும் மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.