அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன், 15 ஜூன் 2023 (17:27 IST)
இதய அறுவைச் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று முன் தினம் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயல் துறை சார்ந்த நான்கு மூத்த மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையால் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இதய அறுவைச் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை நாங்களே வழங்குவோம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்தனர்.

இந்த வாதத்திற்கு பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்