சென்னை ரேஸ்கிளப் வரி விவகாரம்: தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (11:48 IST)
சென்னை ரேஸ் கிளப்க்கு, ரூ.3.60 கோடி சொத்து வரி செலுத்தக்கூறி, மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய சொத்துவரி நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ரூ.35 லட்சத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை ரேஸ் கிளப்-க்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
1998 முதல் 2018 வரையிலான ரூ.3.60 கோடி  சொத்துவரியை செலுத்த வேண்டும் என ரேஸ் கிளப்க்கு சென்னை மாநகராட்சி கடந்த 2020ல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்