சி.எஸ்.கே-கிட்ட மோதுறதும், ஆபத்துக்கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு! – முன்னாள் வீரர் எச்சரிக்கை!

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (08:59 IST)
நேற்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் வெற்றி பெற்ற நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் அணி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் 2023 போட்டிகளில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது.

அடுத்ததாக 218 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி சிஎஸ்கேவின் அதிரடியான பவுலிங், ஃபீல்டிங்கால் திணறியது. எனினும் 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் வரை நெருங்கி வந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் இந்த சீசனின் முதல் வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது.



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங் ” சார் ரிலீஸ் ஆகியிருக்குற பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல MSDhoni இந்த முறை ஐபிஎல் கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. CSK கூட விளையாடுறதும்,ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு.” என்று பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்