சென்னை இசைக்கலைஞர் கடத்தல்.. ரூ.3 கோடி மோசடி செய்தாரா?

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (10:44 IST)
சென்னை சேர்ந்த இசை கலைஞர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாகவும் அவர் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததால் கடத்தப்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த இசை கலைஞர் தேவானந்த் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் திடீரென கடத்தப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடித்துவிட்டு அவர் திருவேற்காடில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது திடீரென அவரது கார் மறிக்கப்பட்டு அவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
நிதி நிறுவனம் ஒன்றை அவரது சகோதரர் நடத்திய நிலையில் அந்த நிதி நிறுவனம் ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாகவும், இதனால் தான் இந்த கடத்தல் நடத்தப்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
 
 இந்த நிலையில் தேவானந்தை கடத்தி சென்ற மர்ம கும்பலை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்