விஜய் பட நடிகையிடம் ரூ.80 லட்சம் மோசடி

திங்கள், 19 ஜூன் 2023 (16:25 IST)
தமிழ் சினிமாவில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா மந்தனா.  இப்படத்தை அடுத்து, விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த புஷ்பா  சூப்பர் ஹிட்டானதை அடுத்து, புஷ்பா -2 , கபீர் சிங், அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில், ரன்பீர் கபீர் நடிப்பில் உருவாகி வரும்  அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.

எனவே தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  நடிகை ராஷ்மிகாவிடம் நீண்ட காலம் பணியாற்றிய பணியாற்றியவர் ரூ. 80 லட்சம் ஏமாற்றி விட்டதாகவும் அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகிறது.

ஆனால், இந்தச் சம்பவம் பற்றி அதிகாரப்பூர்வமாக அவர் கூறவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்