கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மேயர் ப்ரியா

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (15:54 IST)
கன மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் சென்னை கன மழையை எதிர் கொள்ளும் வகையில் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் 
 
இன்று இலவச மருத்துவ முகாமை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய மேயர் ப்ரியா, ‘வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளதாகவும், மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார் 
 
மேலும் சென்னை நகரில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்