ஆசிய பல்கலைகழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டிக்கு எந்த இடம்?

புதன், 9 நவம்பர் 2022 (08:25 IST)
ஆசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் டாப் 200 பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பல்கலைக்கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலை சர்வதேச தர வரிசை கழகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் உள்ள சென்னை ஐஐடிக்கு இந்த பட்டியலில் 53வது இடம் கிடைத்துள்ளது என்பதும் வேலூர் விஐடிக்கு 173வது இடமும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 185 வது இடமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பட்டியலில் மும்பை 40வது இடத்தையும் டெல்லி ஐஐடி இந்த பட்டியலில் 46வது இடத்தையும் பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி 52 வது இடத்தையும் பிடித்துள்ளது 
 
மேலும் காரக்பூர் ஐஐடி, கான்பூர் ஐஐடி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்