வேங்கை வயல் சம்பவத்தில் ஒருவர் கூட கைது செய்ய முடியாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம்

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (14:59 IST)
வேங்கை வயல் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை கிராமத்தில் மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் மலம் கலந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்த நிலையில் இன்னும் ஒருவர் கூட சம்பந்தப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்படவில்லை.

மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி அமைப்புக்கு மாற்றப்பட்ட நிலையில், டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று விசாரணை நடந்த போது வேங்கை வயல் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் இன்னும் இரண்டு வாரங்களில் இது குறித்து தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்