கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம்? மறுபரிசீலனை செய்க: சென்னை உயர்நீதிமன்றம்..!

Mahendran

வெள்ளி, 5 ஜூலை 2024 (14:26 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் என்பது அதிகம் என்றும் இந்த தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் 65 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியான நிலையில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுவான பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது என்றும் தீ விபத்து உள்ளிட்ட விபத்துகளில் பலியானவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம் என்றும் இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என்றும் நீதிபதிகள் எழுப்பினர். மேலும் இந்த தொகையை மறு பரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்