கோவில் சிலை, நகைகள் ஆன்லைனில் பதிவேற்றம்.. ஸ்ட்ராங் ரூம்…! – அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (12:21 IST)
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், சிதிலமடைந்த கோவில்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் பராமரிப்பு குறித்து கடந்த 2015 முதலாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக அறநிலைய துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சிலவற்றை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

அதன்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதி சிதிலமடைந்த மற்றும் முழுவதும் சிதிலமடைந்த கோவில்களை யுனெஸ்கோ விதிமுறைகளின்படி சீரமைக்க வேண்டும்.

கோவில்களில் உள்ள சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

சிலைகள், நகைகளை பாதுகாக்க கோவில்களில் ஸ்ட்ராங் ரூம் அமைக்க வேண்டும்.

மத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவை அமைக்க வேண்டும்

கோவில் நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும். கோவில் சொத்து மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்துகளை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறாக பல்வேறு நடவடிக்கைகளை நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்