+2 மதிப்பெண்கள் எந்த முறையில் வழங்கப்படும்!? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

திங்கள், 7 ஜூன் 2021 (11:48 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சியமைத்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

இதில் மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்