உரிமை மீறல் வழக்கில் புதிய நோட்டீஸ் அனுப்பப்படுமா? பரபரப்பு தீர்ப்பின் விபரம்

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (11:25 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட 19 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவர இருப்பதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன்படி திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாகவும், புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
உரிமை மீறல் நோட்டீஸ்ஸை எதிர்த்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு சென்றதால் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்களுக்கும் புதிய நோட்டீஸ் அனுப்பப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்