அரசு நிகழ்வொன்றும் கூவத்தூர் குலுக்கல் போட்டி அல்ல: உதயநிதி சீற்றம்!!

சனி, 22 ஆகஸ்ட் 2020 (11:15 IST)
அரசு நிகழ்வில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் திமுக பிரநிதிகளை ஒதுக்குவதை உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார். 
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் கொரோனா நடவடிக்கைகளை முதல்வர் கண்காணிக்க வந்த போது அம்மாவட்ட திமுக எம்.பி செந்தில்குமார் முதல்வரை சந்திக்க வந்துள்ளார்.
 
ஆனால் முதல்வரை சந்திக்க விடாமல் செந்தில்குமாரை போலீஸ் தடுத்ததால் அங்கு வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். ”எம்பியாக மக்களின் துயரத்தையும் மருத்துவராக கொரோனாவின் வீரியத்தையும் அறிந்த எம்.பி செந்தில்குமாரை ஆய்வுகூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுத்தது தருமபுரி மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். 
 
மக்களால் தேர்வானவருக்கும் காலில் விழுந்து கமிஷன் அடிக்கும் வாய்ப்பை பெற்றவருக்குமான வித்தியாசம் இதுதான். ஆலோசனை சொல்லப்போகும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளே விடுவதில்லை. அப்புறம் கொரோனா ஒழிப்புக்கு திமுகழகம் என்ன யோசனை சொன்னது என கேட்பது. மக்கள் பிரதிநிதியை உள்ளே விடாமல் நடத்த அரசு நிகழ்வொன்றும் கூவத்தூர் குலுக்கல் போட்டி அல்ல என்பதை முதல்வர் உணர வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்