சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதால் பரபரப்பு

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (08:00 IST)
வங்கக்கடலில் நேற்று ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு புயல் அபாயம் உள்ளதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னையிலும் இன்று பல இடங்களில் மாலை அல்லது இரவில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் மணிக்கு 65 முதல் 75 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்