தமிழகத்தில் மணல் கொள்ளை என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இதற்கு தீர்வு ஏற்படாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் மணல் கடத்தல்காரர்களுக்கு அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சி பிரமுகர்களும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 'மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை விடவேண்டும் என்றும், இந்த சுற்றறிக்கை வரும் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.