முறையாகப் பராமரிக்கப்படாத நெடுஞ்சாலைகளுக்கு இடையில் இருக்கும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை ஏன் பாதியாகக் குறைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சத்தியநாராயணன் எழுதிய கடிதம் ஒன்றின் அடிப்படையில் முறையாக பராமரிக்கப்படாத மதுரவாயல் மற்றும் வாலாஜாபாத் நெடுஞ்சாலை சம்மந்தமான வழக்கு விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பான விசாரணையின் போது நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, ’குறிப்பிட்ட சாலையை ஒழுங்காக பரமரிக்கும் வரை ஏன் சுங்கக் கட்டணத்தை பாதியாக வசூலிக்கக் கூடாது ?’ எனக் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை, இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக நெடுஞ்சாலைத் துறை ஆகிய மூன்று துறைகளும் டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.