மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் அழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். 4 நாட்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகும் சிறுவன் சுஜித்தை காப்பாற்ற முடியவில்லை. குழந்தை சுர்ஜித்தின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் மரணத்தை முன்னிறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ஆழ்துளை கிணறுகளை பராமரிப்பது, மூடி வைப்பது ஆகியவற்றை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘தமிழகத்தில் இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அவை முறையாக பராமரிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?’ என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.