தற்போது அதிகரித்து வரும் கடன் பிரச்சினையை சரிசெய்ய சுங்க வரியை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். முதலில் சிறிய சுங்க சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கும் என்றும், சிறிது நாளில் அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணம் அதிகரிக்கப்படுமென்றும் கூறப்படுகிறது.
தற்போது பஸ், கார், வேன் என வாகனக்களுக்கு ஏற்றவாறும், பயணிகளுக்கு ஏற்றவாறும் பல வகைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் 4 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சரக்கு வாகனங்களுக்கும் சுங்க வரி அதிகரிக்கப்படும் என்பதால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சரக்கு கொள்முதல் செய்வோரும் ஏற்கனவே விற்பனை வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றால் திண்டாட்டத்தில் இருக்க, இந்த சுங்கவரி உயர்வு உள்ளூர் வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.