தென்தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (17:20 IST)
தமிழ்நாட்டில்  இன்று தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  நாளை முதல் வரும் 11 ஆம் தேதி வரை   தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,சென்னை மற்றும் அதன்புற நகர் பகுதியில்,  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்