நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்..! வானிலை மையம் தகவல்..!!.

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (14:24 IST)
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் நேற்று (02-01-2024)  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,  இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று (03-01-2024)  அதே பகுதிகளில் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ALSO READ: மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு குட் நியூஸ்..!!
 
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
 
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை,  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில  பகுதிகளில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்