இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. எனவே நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தித்திக்கும் இனிப்பு வகைகளும் .... மனதை மயக்கும் புது வண்ணவுடைகளும் ...
பட படவென வெடிக்கும் பட்டாசுகளும் ... அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மின்னிட ...இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என் சந்தோஷங்களே!! என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவ்து:
தமிழக மக்கள் அனைவர் வாழ்விலும், தீமைகள் நீங்கி நல் ஒளி பிறக்கவும், இன்பமும், மகிழ்ச்சியும் பெருகிடவும், அன்பும் சகோதரத்துவமும் நிலைத்திடவும், தமிழக பாஜக சார்பாக, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தன் வலைதள பக்கத்தில்,
உங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம்,வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்தக் கூடிய தீபாவளியாக அமையட்டும்.
இந்த பண்டிகை அனைவருக்கும் அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தட்டும். என்று தெரிவித்துள்ளார்.