கருணாநிதிக்கு மெரினாவில் இடம்; வழக்கு விசாரணை காலை 8.30 மணிக்கு ஒத்திவைப்பு

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (01:28 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்வது தொடர்பான மனு மீதான விசாரணை, தமிழக அரசு பதில் தர அவகாசம் அளித்து விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.30 மணிக்கு காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து திமுக சார்பில் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி குலுகாடி ரமேஷிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதனிடையே ஜெயலலிதா உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் பதில் தர போதிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்