மாரிதாஸை ஆதரித்த பாஜக... போலீசார் வழக்குப்பதிவு!!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:21 IST)
யூடியூபர் மாரிதாஸை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 
மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மாரிதாஸ் அவ்வபோது சர்ச்சையான கருத்துகளால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக மாரிதாஸ் மீது வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
 
அதன்பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாரிதாஸை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவரை டிசம்பர் 23 வரை சிறையில் அடைக்க மதுரை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் யூடியூபர் மாரிதாஸை போலீசார் நேற்று கைது செய்த போது மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்ட 50 பேர் மீது 6 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்