கார் மோதி பறந்த பெண்; மனதை பதறவைக்கும் வீடியோ

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (17:25 IST)
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்தியாவில் சாலை விபத்து அதிகமாகி கொண்டிருக்கிறது. வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதையடுத்து விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது. அலட்சியம், கவணக்குறைவு, வேகம், போக்குவரத்து விதிமுறை மீறல் போன்றவை இன்று விபத்து ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளது.
 
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற பெண் ஒருவர் கார் மோதியதில் வாகனத்துடன் தூக்கிய வீசப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை பார்த்தவர்கள் பதறியடித்து அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
அந்த பெண்ணுக்கு 5 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பது தெரியவந்துள்ளது.
 

நன்றி: Selva Kumar

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்