பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவமனையை அனுகியபோதும் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அங்கு சுவாச குழாய் வசதி இல்லை என கூறி திரும்பி அனுப்பினர். இதன் காரணமாக சுமார் 7 மணி நேரம் ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய முருகன் கடந்த 7ம் தேதி காலை 6 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியிருந்த நிலையில், இதற்காக கேரள முதல்வர் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார்” எனவும்,