கனமழை எதிரொலி: ரத்து செய்யப்பட்ட, திருப்பிவிடப்பட்ட ரயில்களின் விவரங்கள்:

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (13:21 IST)
தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

1. இன்று மாலை 4.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்: 20605 முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது

2. இன்று காலை 11.35 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருச்சி விரைவு ரெயில் (வண்டி எண்: 22628) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது

பகுதியாக ரத்து செய்யப்பட்ட ரயில் :

3. இன்று கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரெயில் (வண்டி எண் : 20636) கொல்லம் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிலையத்தில் இருந்து இரவு 10:50 மணிக்கு புறப்படும்

பாதை மாற்றி விடப்பட்ட ரயில்கள் :

4. சென்னை எழும்பூரில் இருந்து இன்று 10:50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரெயில் (வண்டி எண் - 20635) திண்டுக்கல்லில் இருந்து திருப்பி விடப்பட்டு பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக கொல்லம் செல்லும்

5. காசிக்குடா - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண் : 16353) இன்று மதியம் 3.45 மணிக்கு மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, பாலக்காடு, சோரனுர், எர்ணாகுளம் வடக்கு, கொல்லம், திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படும்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்