விடிய விடிய பெய்த கனமழையால் சதுரகிரியில் வெள்ளம்: பக்தர்களை கயிறு மூலம் மீட்ட மீட்புப்படை..!

திங்கள், 18 டிசம்பர் 2023 (12:52 IST)
கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல் வெளியாகி உள்ளன. தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல பொது மக்கள் பாதுகாப்பாக  மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விருதுநகரில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக சதுரகிரியின் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தர்களை தீயணைப்புத் துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் வனத்துறையினர், மீட்பு படையினர் கயிறு மூலம் கட்டி மீட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மிகவும் பாதுகாப்பாக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்  வரலாறு காணாத மழையால் விருதுநகர் மாவட்ட எல்லிங்க நாயக்கன்பட்டி செங்கோட்டை கிராமங்களுக்கிடையிலான தரை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு உள்ள நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்