நடு ரோட்டில் டாக்ஸி டிரைவரிடம் வாக்குவாதம் – சென்னையில் நடந்த வழிப்பறி !

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:07 IST)
அரும்பாக்கத்தில் கால்டாக்ஸி டிரைவரோடு இரு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கி அவரது செல்போனையும் எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கோயம்பேடு பகுதியில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ அருகே அவரது கார் வந்தபோது இரண்டுபேர் அவரது காரை வழிமறித்து சவாரிக்கு வரும்படி அழைத்தனர். அவர்களுக்குப் பதிலளித்த தமிழ்ச்செல்வன் ஆன்லைனில் கார் புக் செய்ய சொல்லியுள்ளார்.

இதை ஏற்க மறுத்த இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஓட்டுநரை இருவரும் தாக்க முயல, அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். தொடர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அவரிடமிருந்த ரூ.4000 பணம் மற்றும் செல்போனைப் பறித்துக்கொண்டு நடந்து சென்றனர். இந்த சம்பவத்தைக் காரில் சென்ற பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து தமிழ்ச்செல்வன் போலிஸில் புகார் அளிக்க போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்