சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பல்சர் பாபு. இவர் பல்சர் பைக்குகளில் மட்டுமே வந்து வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் பல்சர் பாபு என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளார். இவர்மீது 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கஜேந்திரன் பணியில் இருந்த போது பல்சர் பாபு தனக்கு தலைவலிப்பதாகக் கூறியதால் கஜேந்திரன் டீ வாங்கிவர சென்றுள்ளார். அந்நேரம் பார்த்து பணியினை மாற்றிக் கொள்ள வந்த சுந்தர் தனது பைக்கிலேயே சாவி மற்றும் துப்பாக்கியை மறந்து வைத்துவிட்டு வந்துள்ளார்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட பல்சர் பாபு அந்த வண்டியில் இருந்த துப்பாக்கியை அருகில் இருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளார். இதில் என்னவொரு ஆச்சர்யம் என்றால் அவர் தப்பித்துச் சென்ற சுந்தரின் பைக்கும் பல்சர் பைக்தான்.
பாபு எவ்வாறு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார் என்று போலிஸார் விசாரித்து வருகின்றனர். பைக் நிறுத்தி இருந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் விசாரணைப் பணிகள் தாமதமாகி வருகிறது. பணியில் அலட்சியமாக இருந்த காவலர்கள் கஜேந்திரன் மற்றும் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.