போராட்டங்களுக்கு ஏது ஓய்வு!! புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் வலுக்கும் சிஏஏ எதிர்ப்பு

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (10:05 IST)
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நள்ளிரவு வேளையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நள்ளிரவிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன.

சென்னை பனகல் மாளிகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

மேலும் திருச்சியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது, அதே போல், ஆவடி, விருத்தாச்சலம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்தனர்.

குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் மெழுகுவர்த்தி ஏற்றி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்