மாண்டஸ் புயல் எதிரொலி: இன்று இரவு பேருந்து சேவை கட்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:00 IST)
அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று இரவு பேருந்து சேவை இருக்காது என அறிவிப்பு.


மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் குறைவாகவே பயணம் செய்து வருகின்றன. 

காலை நிலவரப்படி சென்னையில் இருந்து 320 கீமி தொலைவிலும் காரைக்காலில் இருந்து 240 கீமி தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. புயலானது சென்னை தென் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அந்த பகுதியில் எந்தவித வாகன போக்குவரத்தும் குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் பேருந்து சேவை இருக்காது. பஸ் நிலையங்களில் கூட்டமாக மக்கள் நிற்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்