கணவன் கண்முன்னே மனைவியை சீரழித்த சிறுவர்கள்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (14:45 IST)
திருவள்ளூரில் கணவன் கண் முன்னே மனைவியை இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் முரளி, இவர் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 
 
அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த நபர்கள்,முரளியை வழிமறித்து அவரை அடித்துபோட்டுவிட்டு அவரின் மனைவியை கற்பழித்தவிட்டு தப்பியோடிவிட்டனர்.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, இந்த நாச வேலையை செய்த 4 பேரை கைது செய்தனர். கொடுமை என்னவென்றால் அவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். போலீஸார் 2 பேரை புழல் சிறையிலும், சிறுவர்கள் இருவரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்