சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக அழைத்துச் சென்ற பெற்றோர்கள்..!

Mahendran
வெள்ளி, 14 ஜூன் 2024 (16:50 IST)
சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த பள்ளி மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்கள் அவசர அவசரமாக அழைத்துச் சென்றதாக செய்தி வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அதன் பின் சைபர் கிரைம் மூலம் விசாரணை நடந்து வந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த பரபரப்பு முடிந்த சில மாதங்களில் மீண்டும் சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை மாங்காடு அருகே உள்ள தனியார் பள்ளிக்கு சற்றுமுன் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை எடுத்து பள்ளியில் இருந்து தங்கள் குழந்தைகளை பெற்றவர்கள் அவசர அவசரமாக அழைத்துச் சென்றனர்.
 
மேலும் பள்ளி வளாகத்தில் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதாகவும் இதுவரை எந்த வெடிகுண்டு பொருட்களும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்