பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

Siva

திங்கள், 19 மே 2025 (07:33 IST)
வடக்கு வாசிரிஸ்தானில் உள்ள மிரன்ஷா-பன்னு சாலையில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் பயணித்தபோது,  ஆயுதங்களுடன் இருந்த குழுவினர் திடீரென தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலால் ராணுவ வாகனங்கள் தீவிரமாக சேதமடைந்துள்ளன. உயிரிழந்த சிப்பாய்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
சில வீரர்கள் தாக்குதலின் அதிர்ச்சியில் தங்கள் வாகனங்களையும் ஆயுதங்களையும் விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். அதிகபட்சமாக 8 ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் இரண்டு வாகனங்கள் முழுமையாக நாசமானது.
 
இந்த தாக்குதலுக்கு "இத்திஹாத் உல் முஜாஹிதீன் பாகிஸ்தான்" என்ற புதிய முசுலிம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பில் பாகிஸ்தானிய தாலிபானின் முக்கியமான மூன்று பிரிவுகள் சேர்ந்துள்ளன: ஹபீஸ் குல் பஹாதூர் குழு, லஷ்கர்-ஈ-இஸ்லாம் மற்றும் ஹர்கத் இந்கிலாப்-இ-இஸ்லாமி பாகிஸ்தான்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்