விண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்!

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (19:15 IST)
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலே போகிப்பண்டிகை. இதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை முற்றத்தில் வைத்து தீயிட்டு எரிப்பது வழக்கம்.
 
தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள்.
 
நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய அளவில் மாசடைகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்று புகைமூட்டம் அதிகமாக இருந்தது. எதிரில் உள்ளவை தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது.
 
இந்நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, பிளாஸ்டிக், பருத்திக்கொட்டைன்னு கண்டதை எரிச்சு எரிச்சலை கிளப்பாதீங்கய்யா! தமிழ்நாடே புகைமூட்டமா இருக்காம்!  விண்வெளியிலிருந்து பார்த்து சொல்லுறாங்க! சாத்திரத்துக்கு சூடம் மட்டும் கொளுத்தினா போதும், இதை அக்கம் பக்கத்துல உள்ளவங்க, நம்பர்கள் எல்லாருக்கும் சொல்லிகுடுங்க என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்