அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு..! – பாஜக மகளிரணியினர் கைது!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:05 IST)
மதுரை சென்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதி உயிர்நீத்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை சென்றிருந்தார்.

அவர் திரும்பி வரும்போது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த பாஜகவினர் திடீரென அமைச்சர் கார் மீது காலணிகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ச்ருப்பின் புகைப்படத்தை பதிவிட்டு ட்விட்டரில் கிண்டலாக பதிவொன்றை அமைச்சர் இட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக பாஜக மாவட்ட துணைத்தலைவர் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். தற்போது செருப்பு வீசியது தொடர்பாக பாஜக மகளிர் அணியை சேர்ந்த மேலும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்