பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது: என்ன காரணம்?

ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (16:11 IST)
பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது: என்ன காரணம்?
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் திடீரென கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி என்ற பகுதியில் கடந்த 11ஆம் தேதி அரசுக்கு சொந்தமான பாரதமாதா நினைவிட நுழைவாயிலில் பூட்டை பாஜக மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் உடைத்ததாக தெரிகிறது 
 
இந்த விவகாரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பூட்டை உடைத்த குற்றத்திற்காக கேபி ராமலிங்கம் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
 
பாஜக மாநில துணைத்தலைவர்  கேபி ராமலிங்கம் கைது செய்ததற்கு பாஜகவினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்