பாஜக வணிக பிரிவின் துணை தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (21:17 IST)
பாஜகவின் வணிக பிரிவு தலைவர் துணைத்தலைவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜகவின் தமிழக தலைவராக அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன்னர் பாஜக பிரிவின் துணை தலைவராக செயல்பட்டு வந்த தணிகைவேல் என்பவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாஜக நிர்வாகி ஒருவருடைய வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கையை பாஜக தலைமை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக வணிகப் பிரிவின் துணை தலைவராக இருந்த தணிகைவேல் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டவர் என்பதும் அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்