பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள் " பாத யாத்திரை!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (17:27 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என்மண் என் மக்கள் என்ற கோஷத்துடன் அரசியல் மாற்றத்திற்காக பாதயாத்திரை செய்து வருகிறார்.

இதுவரை 88 தொகுதிகளுக்கு சென்றுள்ள அண்ணா மலை 89வது தொகுதியாக திருச்செங்கோட்டிற்கு வருகை தந்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள் " யாத்திரையை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடங்கினார்.

இந்த யாத்திரை வேலூர் ரோடு சிஎச்பி காலனியில் தொடங்கி அரசு மருத்துவமனை சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை, தெற்குரதவீதி, மேற்கு ரதவீதி,வடக்கு ரதவீதி,என பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக சென்று  பழைய பேருந்து நிலையம்அருகில் அண்ணாசிலை அருகே நிறைவுபெற்றது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.

அப்போது திமுக என்று ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம்தேச விரோத சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. திமுக ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி ஆனால் ஊழலுக்கு ஆதரவான கட்சிஇந்த யாத்திரை முடியும் நேரத்தில் திமுக வீட்டுக்கு செல்லும்நாடாளுமன்ற தேர்தலில் 3 வது முறையாக பாஜக வை வெற்றி பெற செய்யுங்கள்என கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை கூறியதாவது 2024 தமிழகத்தில் அரசியல் களம் மாறும்தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடைபெற இருப்பதற்கான சாட்சியாகத்தான் இந்த யாத்திரையில் அனைத்து தரப்பு மக்களு்ம் பங்கேற்று உள்ளனர்.

TM காளியன்ண கவுண்டர், VVCR முருகேச முதலியார் போன்ற தேசிய தலைவர்கள் பிறந்த மண் திருச்செங்கோடு.தமிழ் நாட்டில் சனாதநத்தை ஒழிக்க முடியாது என்பதற்கு திருச்செங்கோடு பவுர்ணமி கிரிவலம் தான்சாட்சி.முதல்வருக்கு விவசாயம் என்றால் என்ன என்று தெரியாது. பால் காம்பில் வருமா கொம்பில் வருமா என கேட்பார். ஒத்தையை கொடுத்து கத்தையாக அடிக்க திமுகவினர் திட்டம் தீட்டி ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் வரா கடன் 10% இருந்தது. இன்று அது 3% ஆக உள்ளது. முத்ரா கடன் , சாலை ஓர வியாபாரி கடன் , கிசான் கிரெடிட் கார்டு 30 பைசா வட்டியில்இத்தனை திட்டங்களை மத்திய அரசு செய்துள்ள நிலையில் முதல்வர் தமிழகத்துக்கு  மத்திய அரசு எதுவும் செய்யவே இல்லை என பொய் கூறி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி பல்லடம் பகுதியில் நடந்த சம்பவம் குடியால் 4 பேர் வெட்டி கொலைசெய்யப்பட்டனர். இறந்தவர்களுக்கு 2 லட்சம் நிதி உதவி. ஆனால் கள்ளசாராயம் குடித்து இறந்த  நபர்களுக்கு 10 லட்சம் நிதி. ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லை என்பதற்கு இதவே சாட்சி.

ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தாலும் சரி வேறு நேரத்தில் நடந்தாலும் திமுகவுக்கு எதிராக வாக்கு அளிக்க வேண்டும்.ரிக் பிரதான தொழிலாக இங்கு உள்ளது.டீசல் லிட்டருக்கு 4ரூபாய் கறைப்பதாக வாக்குறுதியளித்த திமுக அதனைசெய்வில்லை.கர்நாடகாவுக்கு தமிழ் நாட்டுக்கும் 1 லிட்டர் டீசல் 7 ரூ வித்தியாசம் உள்ளது. திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்காமல் சட்டப்பேரவையில் முதல்வருக்கு துதி பாடுவதே வேலையாகஇருந்து வருகிறார். 

கொடுத்த வாக்குறுதிகளை 30 மாதம் ஆகியும் நிறைவேற்ற இல்லை.பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு தமிழ் மொழியை முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை என வேதனை அடைகிறார். ஆனால் இவர்கள் தமிழ் மொழியை கும்மிடிப்பூண்டி தாண்டாமல் அரசியல் செய்கிறார்கள். பிரதமர் உலக நாடுகளில் 600 கோடி மக்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்கிறார்அவர் மீது குற்ற சாட்டு வைக்க வேண்டும் என்றால் ஹிந்தி தினிக்கிரார் என்று சொல்லக் கூடாது.

தமிழை உலக நாடுகளில் திணிக்கிறார் என குற்றம் சாட்டுங்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400இடங்களுக்கு மேல் பெற்று 3வத மறையாக சோடிதலைமையில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் 40 தொகதிகளிலும் பாஜக வெல் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அரசியல் மாற்றம் வரும் னெ்பது உங்களை காணும் போது தெரிகிறது. பாஜகவுக்கு வாக்களியுங்கள் என கூறினார்.

யாத்திரையிலும் பொதுக்கூட்டத்திலும் பாஜக கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் தினேஷ்குமார்உள்ளிட்ட கட்சியின் மாவட்ட ஒன்றி நகர நிர்வாகிகள் னெ பலரும் கலந்து கொண்டனர்.
 
Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்