பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிடுவதா? திமுகவினர்களுக்கு அண்ணாமலை கண்டனம்..!

திங்கள், 30 அக்டோபர் 2023 (08:12 IST)
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் திமுகவினர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

திமுகவினர் வாக்கு வாங்கி வேண்டும் என்பதற்காக தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கின்றனர் என்றும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் திமுகவினர் பாகிஸ்தான் டி-ஷர்ட் போட்டுகொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டனர் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகம் வன்முறை களமாக மாறி வருகிறது என்றும் முன் எப்போதும் இல்லாத வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் தமிழக முதல்வரை பொருத்தவரை தனது குடும்ப மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் பாஜக ஆட்சி அடிமட்ட மக்களுக்கான ஆட்சி என்றும் திமுக மருமகன் மற்றும் மகனுக்கான ஆட்சி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்