நர்சிங் மாணவியிடம் சில்மிஷம் செய்த பாஜக பிரமுகர் – சிவகங்கையில் பரபரப்பு !

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (14:20 IST)
சிவகங்கையில் செயல்பட்டு தனியார் நர்சிங் கல்லூரி கலாச்சார பிரிவு தலைவர்  சிவகுரு துரைராஜன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கையைச் சேர்ந்த, 19 வயது இளம் பெண் ஒருவருக்கும், சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்ற இளைஞருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் அந்தப் பெண்ணை விசாரித்ததில் சில அதிர்ச்சியளிக்கும் தகவல்களை சொல்லியுள்ளார். சிவகங்கையில் மதுரை விலக்கு சாலையில் குட்மேனஸ் என்ற தனியார் கல்லூரி கலாச்சார பிரிவு தலைவர் சிவகுரு துரைராஜ், தனக்கு அதிகமாக பிராக்டிகல் மார்க்ஸ் வழங்குவதாக சொல்லி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். . இதுகுறித்து வெளியே கூறினால் அப்பெண்ணைக் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியிருக்கிறார். அதில் பயந்த அந்தப் பெண் வெளியே யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட சிவகுரு துரைராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாஜகவில் அப்பகுதியில் பிரபலமானவர் எனறு கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்