'காலா' படம் பார்த்த தமிழிசை செளந்திரராஜன்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (18:37 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் இன்று அவர் நடித்த 'காலா' திரைப்படம்  வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பாஜகவுக்கு எதிரான கருத்துக்கள் மறைமுகமாக இருப்பதால் இந்த படம் வெளியானதில் இருந்து ரஜினி, பாஜக ஆதரவாளர் என்ற பிம்பம் மாறி வருகிறது. இந்த படத்தின் வில்லன் கேரக்டரே கிட்டத்தட்ட பாஜகவின் முக்கிய பிரமுகர் ஒருவரின் கேரக்டர் போல் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.
 
எனவே இந்த படத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெர்சல் படத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் இந்த படத்தை கண்டுகொள்ளவில்லை.
 
அதுமட்டுமின்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று சென்னையில் உள்ள திரையரங்கில் 'காலா' படத்தை தனது கட்சி நிர்வாகிகளுடன் ரசித்து பார்த்தார். 'காலா' படம் குறித்து அவர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை எனினும், இதுகுறித்து வெளியான டுவீட்டுக்களை அவர் ரீடுவீட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்