தனுஷ் சொன்னது போல் அருங்காட்சியகம் சென்ற காலா ஜீப்

வியாழன், 7 ஜூன் 2018 (18:26 IST)
காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்திய தார் ஜீப் மகிந்திரா நிறுவனத்தின் அருங்காட்சியகத்துக்கு சென்றது.

 
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் காலா இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மகிந்திரா நிறுவனத்தின் தார் ஜீப்பை பயன்படுத்தியுள்ளார்.
 
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் அன்றே அந்த ஜீப் தங்களுக்கு வேண்டுமென்று டுவிட்டர் பக்கத்தில் மிகிந்திரா நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டது. அப்போது காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கண்டிப்பாக ஷூட்டிங் முடிந்த பின் தருகிறோம் என்று கூறியிருந்தார்.
 
அதன்படி இன்று ரஜினி பயன்படுத்திய தார் ஜீப் மகிந்திரா நிறுவனத்தின் அருங்காட்சியகத்துக்கு சென்றது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்