காவல்துறையை மீறி கொடி ஏற்றம்: தமிழிசை அதிரடி பதில்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (09:01 IST)
மத்திய சென்னையில் தேசிய கொடியை ஏற்ற, பா.ஜனதா கட்சியினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.


 


அதை மீறி, தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம் மாதவ் கொடியேற்றினார்.

இது குறித்து, தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “பா.ஜனதா கட்சியினர் கொடி ஏற்றுவதை காவல்துறையினரால் தடுக்க முடியாது. சுதந்திர தினத்தில் சுதந்திர தேவியை வணங்க ஆங்காங்கே தேசிய கொடி ஏற்றுவதில் தவறு இல்லை. அதை காவல்துறையினர் தடுத்தால் பா.ஜனதா கட்சியினர் பொறுத்து கொள்ள மாட்டார்கள்.” என்றார்.
அடுத்த கட்டுரையில்