பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பு இல்லை" - அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:59 IST)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்தாலும் அந்த வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் மட்டுமே குறைவதில்லை. மாறாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
கச்சா எண்ணெயின் விலையை கணக்கில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்தால் தற்போதுள்ள விலையை விட பாதி விலைக்கு தான் பெட்ரோல் டீசல் விலை விற்க வேண்டிய நிலையில் இருக்கும் என எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறிய அண்ணாமலை, மத்திய அரசுக்கு வருமானம் வேண்டும் என்ற காரணத்தினால் தான் பெட்ரோல் டீசல் மட்டும் சிலிண்டர் கேஸ் விலை உயர்த்தப்படுகிறது என்று கூறியுள்ளார் 
 
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளது பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்