வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

Siva

புதன், 16 ஏப்ரல் 2025 (07:27 IST)
சிலி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டை சுத்தப்படுத்தும் போது அப்பாவின் பழைய வங்கி பாஸ்புக் கிடைத்ததாகவும் அதன் மூலம் சட்ட போராட்டத்தில் வென்று தற்போது கோடீஸ்வரர் ஆகியுள்ளதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிலி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது தனது தந்தையின் பாஸ்புக் பார்த்தார். முதலில் அதை அவர் ஆர்வத்துடன் பார்க்காத நிலையில் அதன் பின்னர் அதிலிருந்து தொகையை பார்த்ததும் அவர் ஆச்சரியமடைந்தார்.

வீடு கட்டுவதற்காக அவர் சேமித்து வைத்த தொகை அதிலிருந்து தெரியவந்தது. இதனை அடுத்து அவர் வங்கியில் நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது வங்கி நிர்வாகம் அந்த பணத்தை கொடுக்க மறுத்தது. போதுமான ஆவணங்கள் வேண்டும் என்று கூறியது.
 
இதனை அடுத்து நீதிமன்றத்தில் அந்த இளைஞர் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து பாஸ்புக்கில் உள்ள தொகைக்கு உரிய வட்டியுடன் அந்த இளைஞருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை அடுத்து அந்த இளைஞருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமாக கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே சம்பாதித்து வரும் அந்த இளைஞருக்கு திடீரென ரூ.10 கோடி ஜாக்பாட் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பணம் என்னுடைய அப்பாவின் பணம், அவர் எனக்காக சேர்த்து வைத்த பணம், எனவே தான் நான் சட்ட போராட்டம் நடத்திய இந்த வழக்கை வென்று உள்ளேன் என்று அந்த இளைஞர் தெரிவித்தார்.

பல வருடங்களுக்கு முன் அப்பா சேர்த்து வைத்த பணத்தால் தற்போது அவருடைய மகன் கோடீஸ்வரர் ஆகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்