மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

Siva

புதன், 16 ஏப்ரல் 2025 (07:12 IST)
சென்னை மெரினா கடற்கரை ஏழை எளிய மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வரும் நிலையில் இங்கு வரும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மெரினாவில் சுற்றுச்சூழல் அங்கீகாரமான நீலக்கொடி வழங்கப்படும் என்றும் அந்த வகையில் மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் நீலக்கொடி சான்றிதழ் மெரினாவுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நீலக்கொடி  கடற்கரை திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் கடற்கரையை மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் இந்த பணிகள் முடிந்த பிறகு மெரினாவுக்கு செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஆணையர், மெரினா நீலக்கொடி  கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் தவறானது. மெரினா கடற்கரையை இயற்கையான சூழலில் பொதுமக்கள் பயன்படுத்தவே நீலக்கொடி  திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே பராமரிப்பு கட்டணம் எதுவும் வாங்கும் திட்டம் இல்லை என்று அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்